You are currently viewing பொங்கல் விழா

பொங்கல் விழா

பொங்கல் திருவிழா தமிழினத்தின் கலாச்சாரப் பெருவிழா! உலகுக்கே உணவளிக்கும் இயற்கை செல்வங்களின் திருவிழா! உழைப்போர் பெருவிழா! விதைத்து விளைவித்து முத்திச் சிரிக்கும் நெல் மணிக் கதிரை அறுத்து, திசைகளே சுவர், வானமே கூரை, ஞாயிறே ஒளியென்று கூடிக் குதூகலித்து நாவுக்கு இனியதை தின்று, மனதுக்கு இனியதைப் பாடி, சிந்தனை செழுமைக்கு பேசிப் புத்துணர்வுப் பெருக்கும் பண்பாட்டுத் திருவிழா. புலம்பெயர் அமெரிக்க மண்ணில் தமிழர் மரபு பேணும் சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் விழாவில் பங்கேற்க அனைவரும் வருக! வருக!

Leave a Reply